உள்ளூர் செய்திகள்

மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கடன் உதவி வழங்கினர்.

மகளிர் சுயஉதவி குழுவுக்கு ரூ.28.68 கோடி கடனுதவி

Published On 2022-12-30 07:10 GMT   |   Update On 2022-12-30 07:10 GMT
  • 6592 மகளிர் சுயஉதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
  • 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.7.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி, டிச.30-

திருச்சியில் நேற்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடரந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஒன்றியக்குழு தலைவர்கள் செம்பனார்கோயில் நந்தினி ஸ்ரீதர், குத்தாலம் மகேந்திரன், சீர்காழி கமலஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர். மகளிர் திட்ட இயக்குனர் பழனி வரவேற்றார்.

விழாவில் கலெக்டர் லவிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர் செல்வம் ஆகியோர் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கினர்.

விழாவில் கலெக்டர் லலிதா பேசியதாவது;-

மாவடத்தில் ஐந்து வட்டாரங்களில் 5,857 மகளிர் சுயஉதவி குழுக்களும், மயிலாடுதுறை சீர்காழி ஆகிய நகராட்சிகள், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய நான்கு பேரூராட்சிகள் உள்ளிட்ட ஆறு நகர்புற அமைப்புகளில் 735 அளவிலான மகளிர் சுயஉதவி குழுக்கள் என மொத்தம் 6592 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு நடப்பு நிதியாண்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கிட ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

விழாவில் 652 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20.99 கோடியும், 16 ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.7.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுயதொழில் தொடங்கி மகளிர் சுய உதவி குழுவினர் தங்களது பொருளாதாரத்தை உய ர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News