உள்ளூர் செய்திகள்

ரூ.27 லட்சம் குட்கா கடத்தல் வழக்கில் தலைமறைவான 20 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்

Published On 2022-07-03 14:48 IST   |   Update On 2022-07-03 14:48:00 IST
  • போலீசை கண்டு அங்கிருந்து கும்பல் தப்பி ஓடினர்.
  • ரூ.27 லட்சம் மதிப்புள்ள 4 டன் குட்கா, ரூ.15 லட்சம் மதிப்புள்ள மினி கன்டெய்னர் லாரி ஆகியவற்றை பறிமுதல்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மேல்கொண்டப்ப நாயனப்பள்ளி பகுதியில் ஒரு கோழிப்பண்ணையில் கன்டெய்னர் லாரி ஒன்று இருப்பதாகவும், அதில் இருந்து குட்கா மூட்டைகளை சிலர் இறக்கி கொண்டிருப்பதாக குருபரப்பள்ளி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி தலைமையிலான போலீ சார் அங்கு சென்றனர். போலீசை கண்டு அங்கிருந்து கும்பல் தப்பி ஓடினர்.

இதில் ஒருவர் பிடி பட்டார். விசாரணையில் அவரது பெயர் கார்த்திக்(24). கிருஷ்ணகிரி ராஜீவ் நகரை சேர்ந்தவர், கன்டெய்னர் லாரி டிரைவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 4 டன் குட்கா, ரூ.15 லட்சம் மதிப்புள்ள மினி கன்டெய்னர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்த குட்கா பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்டது என தெரிய வந்தது.

இந்த கடத்தலில் தொடர்புடைய கன்டெய்னர் லாரி உரிமை யாளர் ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கர் பனவட்டம்பாடியை சேர்ந்த சரத்குமார்(26), கிருஷ்ணகிரி மணியாண்ட பள்ளி ராஜேஷ், கிருஷ்ணகிரி நிதிஷ்குமார், குந்தப்பள்ளி அகிலன், கிருஷ்ணகிரி மஞ்சுநாதன், மேலுமலை சிக்கன்கடை உரிமையாளர் சதீஷ்பாபு (40), கொண்டப்பநா யனப்பள்ளி முனுசாமி(40), ஆவல்நத்தம் ராமசாமி, ராஜ்குமார்,

பெங்களூர் சுனில், பெல்லாரம்பள்ளி மாதன், தர்மபுரி மணிகண்டன், கிருஷ்ணகிரி சச்சின், ராயக்கோட்டை திருப்பதி, சூளகிரி மோனிஷா, கிருஷ்ணகிரி புட்டாகீர், மாணிக்கம், அழகியபுதூர் தேவேந்திரன், அளேசீபம் சத்யமூர்த்தி, கிருஷ்ணகிரி விஜயகுமார் ஆகிய 20 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News