உள்ளூர் செய்திகள்
லாரி மூலம் மராட்டியத்திற்கு அனுப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்.

செங்கோட்டையில் இருந்து மராட்டியத்திற்கு சென்ற 2,450 டன் பிளாஸ்டிக் கழிவுகள்

Published On 2022-12-22 06:31 GMT   |   Update On 2022-12-22 06:31 GMT
  • செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்க ப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் மராட்டிய மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • 2.450 டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஆலங்குளம் தனியார் நிறுவனம் மூலம் மராட்டிய மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது.

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்க ப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் மராட்டிய மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி நெல்லை நகராட்சி மண்டல இயக்குனா் அறிவுரையின்படியும், நகராட்சி ஆணையாளா் ஜெயப்பிரியா உத்தரவின்படியும் சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி முன்னிலையில் 2.450 டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஆலங்குளம் தனியார் நிறுவனம் மூலம் மராட்டிய மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது.

நிகழ்ச்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News