அரூர் அரசு கலை கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இலவச மருத்துவ முகாமில் ௨௧௦௦ பேர் பயனடைந்தனர்
- தொண்டை, கண் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை அளித்தனர்.
- 27 டாக்டர்கள், 250 பணியாளர்கள், முகாமில் 2100-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அரசு கலை கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.
இதில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, கர்ப்பிணி மருத்துவர், பல், தொண்டை, கண் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை அளித்தனர்.
27 டாக்டர்கள், 250 பணியாளர்கள், முகாமில் 2100-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் கோட்டாசியர் வில்சன் ராஜசேகரன், பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், மாநில ஆதி திராவிட நலக்குழு துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், வட்டாட்சியர் பெருமாள், தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணா, நகர செயலாளர் முல்லைரவி, மருத்துவர்கள் தொல்காப்பியன், அரசு, அருண், மாதேஷ்வரி, கலையரசன், சுகாதார ஆய்வாளர்கள் இளவரசன், சுரபி, சேகர், கார்த்திகேயன், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.