கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 21 பேர் கைது
- மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
- மணிகண்டன் (24), நல்லவம்பட்டி கோபி (25) உள்பட 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
சூளகிரி போலீசார் வேளாங்கண்ணி ஆர்ச் அருகில் ரோந்து சென்றனர். அந்த வழியாக சென்ற நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அதில் அவர் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் ஹரிகுமார் (வயது 29), சூளகிரி அருகே உள மாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில், லாட்டரி விற்ற கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி சரண்ராஜ் (35), சூளகிரி ஒட்டூர் சீனிவாசன் (35), வடமலம்பட்டி ரமேஷ் (45), ராயக்கோட்டை முருகன் (54), கெலமங்கலம் ஜி.பி. தேவராஜ் (40), ஊத்தங்கரை தாலுகா ஒன்னம்பாளையம் ராஜசேகர் (37), மத்தூர் கீழ் வீதி ராஜகோபால் (74) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 39 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, கக்கன்புரம் சக்திவேல் (47), வேப்பனப்பள்ளி கபீர் (72), பேகேப்பள்ளி சநதிரகலா (45), குந்துமாரனப்பள்ளி சேஷாத்திரி (41), உங்கட்டி பிரசாந்த் (42), புன்னாகரம் தொன்டப்பா (50), மேடுப்பள்ளி பாலகிருஷ்ணன் (26), குருவிநாயனப்பள்ளி முனுசாமி (44), சின்ன பாறையூர் குப்புசாமி (42), அகரம் செல்வம் (50), யு.புரம் நாகராஜ் (41), ஊத்தங்கரை விஜய் (37), சாமல்பட்டி இளையராஜா (46) ஆகிய 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.1,300 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் எங்கும் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் பணம் வைத்து சூதாடியதாக சூளகிரி அருகே உள்ள பந்தார்கட்டு திம்மராயன் (63), சிவக்குமார் (40), பர்கூர் சதீஷ்குமார் (32), சத்யராஜ் (32), விஜயகுமார் (38), பெரியதள்ளப்பாடி சக்திவேல் (46), குப்பநத்தம் கோவிந்தராஜ் (47), நாச்சம்பட்டி சிலம்பரசன் (26), பெரியதள்ளப்பாடி மணிகண்டன் (24), நல்லவம்பட்டி கோபி (25) ஆகிய 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.