உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் தொகுப்பூதிய பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2022-06-04 16:30 IST   |   Update On 2022-06-04 16:30:00 IST
காலிப்பணி இடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காஞ்சிபுரம்:

தமிழ்நாடு, சமூக நலத்துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

எனவே காலிப்பணி இடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் வருகிற 23-ந்தேதி மாலை 5.45-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Tags:    

Similar News