உள்ளூர் செய்திகள்
பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த போது எடுத்த படம்.

பல்லடம் அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து

Published On 2022-06-04 16:21 IST   |   Update On 2022-06-04 16:21:00 IST
வேலை செய்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 30 தொழிலாளர்கள் உயிர் தப்பினர் .
பல்லடம்:

பல்லடம் அருகே கல்லம்பாளையத்தை சேர்ந்தவர்  மனோஜ்.இவர் அந்தப் பகுதியில் பஞ்சு மில் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று மதியம் பஞ்சுமில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து உள்ளே வேலை செய்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் பஞ்சு இருப்பு அறை, மற்றும் பஞ்சு கலவை அறை ஆகியவற்றில் தீ மளமளவென பற்றி அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாகின. 

இதன் மதிப்பு சுமார் பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 30 தொழிலாளர்கள் உயிர் தப்பினர் .தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News