திருப்பூர் மாவட்டத்தில் இயல்பை விட மழை அதிகம்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஜனவரி-பிப்ரவரி மாதங்களை கொண்ட குளிர் பருவத்தில் 15.22 மி.மீ., மழை பெய்தது. மார்ச் மாதத்தில் எதிர்பார்த்த மழையில்லை. சராசரியாக, 13.40 மி.மீ., பதிவாக வேண்டிய மழை, 6.31 மி.மீ., மட்டுமே பெய்திருந்தது.
ஏப்ரல் மாதம் சராசரி 48 மி.மீ., மழை பெய்ய வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு 3மடங்கு அதாவது 127.95 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மே மாதத்தின் சராசரி 73.70 மி.மீ., மழை. ஆனால் 61.47 மி.மீ., பெய்தது.கடந்த 3 மாதங்களில் 17 நாட்கள் கனமழை பெய்து மாவட்டத்தை குளிர்வித்துள்ளது.
மார்ச், மே மாதம் பெய்ய வேண்டிய மழைசராசரியை விட குறைவாக இருந்தாலும் ஏப்ரல் மாதம் 3 மடங்கு அதிக மழை பெய்ததால் கோடை பருவத்தின் சராசரியை காட்டிலும் 60 மி.மீ., மழை அதிகம் கிடைத்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில், இந்தாண்டு சராசரி அளவை காட்டிலும் மழை அதிகம் இருக்குமென வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குளிர் மற்றும் கோடையில் இயல்பான அளவை தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால், மானாவாரி சாகுபடியை முன் கூட்டியே துவக்கவும் விவசாயிகள் தயாராக இருக்கின்றனர் என்றனர்.