உள்ளூர் செய்திகள்
விபத்து நடைபெற்ற போது சிசிடிவியில் பதிவான காட்சி

புதுவை ரெட்டியார் பாளையத்தில் பஸ் மோதி அங்கன்வாடி பெண் ஊழியர் பலி

Published On 2022-06-04 09:36 IST   |   Update On 2022-06-04 09:36:00 IST
புதுவை ரெட்டியார் பாளையத்தில் பஸ் மோதி அங்கன் வாடி பெண் ஊழியர் பலியான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி:

புதுவை முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ராஜலட்சுமி எல்லை பிள்ளை சாவடியில் உள்ள அங்கன் வாடியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டு வந்தார்.

ரெட்டியார் பாளையம் கம்பன் நகர் அருகே வந்த போது தனியார் பஸ் ராஜலட்சுமி மொபட் மீது உரசியது. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். பஸ்சின் முன் பக்க டயர் ராஜலட்சுமி தலையில் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே ராஜலட்சுமி துடிதுடித்து இறந்தார். இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த பதை பதைக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News