உள்ளூர் செய்திகள் (District)
கலெக்டர் ராகுல்நாத்

வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அமர போதுமான இருக்கை அமைக்க வேண்டும்- கலெக்டர் உத்தரவு

Published On 2022-06-03 10:05 GMT   |   Update On 2022-06-03 10:05 GMT
வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ராகுல்நாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நில அளவியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

வண்டலூர்:

வண்டலூர் வட்டாட்சியர் அலுவலத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் ஒன்றிய துணைத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான ஆராமுதன், துணை வட்டாட்சியர் ராஜாகலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்நது வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ராகுல்நாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நில அளவியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் வருகை தரும்போது அவர்களுக்கு போதுமான இருக்கை அமைத்து கொடுக்க வேண்டும், கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து வட்டாசியர் அலுவலகத்தில், பொதுமக்கள் அளித்த மனுக்களின் நிலை குறித்து வட்டாட்சியர் ஆறுமுகத்திடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுவை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News