உள்ளூர் செய்திகள்
வெறிநாய் கடித்து இறந்த ஆடுகள்.

தாராபுரம் அருகே 5 ஆடுகளை கடித்துக்கொன்ற வெறி நாய்கள்

Published On 2022-06-03 15:33 IST   |   Update On 2022-06-03 15:36:00 IST
இறைச்சி கழிவுகளை நாய்கள் திண்பதால் வெறிபிடித்து ஆடுகளை கடித்து கொல்கின்றன.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நந்தவனம்பாளையம் வெறுவேடம்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த 5 ஆடுகளை வெறி நாய்கள் கடித்துக்கொன்றன. நேற்று பூசாரிகவுண்டர் தோட்டத்தில் 6ஆடுகளை கடித்துக்கொன்றன. அப்பகுதியில் கோழிப்பண்ணைகள் உள்ளது. அங்குள்ள இறைச்சி கழிவுகளை நாய்கள் திண்பதால் வெறி பிடித்து ஆடுகளை கடித்து கொல்கின்றன. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News