உள்ளூர் செய்திகள்
சிறப்பு பூஜையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

கடையநல்லூரில் உலக நன்மைக்காகவும், நீர்வளம் செழித்து வாழ பூஜைகள்

Published On 2022-06-03 10:01 GMT   |   Update On 2022-06-03 10:01 GMT
உலகநன்மை வேண்டி கடையநல்லூர் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பிராமணர் மகாஜன சங்கத்தில் பூஜைகள் சிறப்பு நடந்தது.
கடையநல்லூர்:

கடையநல்லூரில் உலக நன்மைக்காகவும், நீர்வளம் செழித்து மக்கள் சுபிட்ஷமாக வாழவும்  ஸ்ரீ பாலாம்பிகை பூஜை மற்றும் ஸ்ரீவராஹி பூஜை, ஸீவாஸினி பூஜைகள் நடந்தது.

 கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பிராமணர் மகாஜன சங்கத்தில் ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடாபதி ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற ஸீவாஸினி பூஜைகள் நடந்தது. 

தொடர்ந்து, அவர்கள் இல்வாழ்க்கையில் சிறந்து வாழ வேண்டி வராஹி அம்மன் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.  முன்னதாக, பெண்கள் பங்கேற்ற பக்தி கும்மி பாட்டு நிகழ்ச்சிகள் நடந்தது.

 நிகழ்ச்சியில் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம், கிருஷ்ணாபுரம் பிராமணர் மகாஜன சங்கம் சுந்தர்ராம், ஸ்ரீ முண்டககன்னி அம்மன் சக்தி பீட அறக்கட்டளை நிறுவனர் பாலீஸ்வரன் மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

பின்னர்  ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

 உலக மக்களுக்கு ஐஸ்வர்யத்தை கொடுக்கும் வகையில் இந்த பூஜை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம்  விவசாயிகள் எல்லா செல்வ, செழிப்பையும் பெறுவதற்காக பாபநாசம் தாமிரபரணி நதியில் சிறப்பு ஆராதனை பூஜைகள் நடத்தப்பட்டது. 

மேலும், வைரஸ் போன்ற கொடிய நோய்கள்  மக்களை பாதிக்காத வகையிலும், அண்டை நாடுகளால் நம் நாட்டிற்கு எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்படாத வண்ணம் இருக்க வராஹி அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News