உள்ளூர் செய்திகள்
ராயபுரத்தில் 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை
ராயபுரத்தில் 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
ராயபுரம், பி.வி. கோவில் தெருவில் எண்ணை கடை மற்றும் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயபிரகாஷ். இரவில் இவரது கடையின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம கும்பல் ரூ.50ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இதேபோல் ஆதாம்சாகிப் தெருவில் 2 மளிகை கடையை உடைத்து ரூ.16 ஆயிரம் ரொக்கம், பொருட்கள் மற்றும் அதே பகுதியில் உள்ள செல்போன் கடையை உடைத்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள், சார்ஜர், ஹெட்போன் ஆகியவற்றையும் மர்மகும்பல் சுருட்டி சென்று இருந்தனர்.
இதில் எண்ணை கடை அருகே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபடுவது பதிவாகி உள்ளது. இதனை வைத்து ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.