உள்ளூர் செய்திகள்
குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து நன்னிலம் தாலுகா பகுதிகளில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் எதிர்பார்த்த நிலையில், பருத்தி சாகுபடி பயன் தராத நிலையில் தற்போது விவசாயிகள் மேட்டூரில் தண்ணீர் திறந்து அப்போது கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளார்கள்.
தற்போது நன்னிலம் தாலுகாவில், தூர்வாரும் பணிகள், தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நிறைவுற்று, தமிழக முதல்வர் ஆய்வு செய்த நிலையில், விவசாயிகள் தங்கள் நிலங்களை, சீர் செய்து, ஆற்றில் நீர் வருவதற்கு முன்பாக, குறுவை சாகுபடி விவசாயத்தை மேற்கொள்வதற்காக, உறுதி அடிப்பதற்காக, டிராக்டர் கொண்டு நிலங்களை உழுது வருகின்றனர். ஒருசில விவசாயிகள் நாற்றங்கால் ஏற்படுத்தி, விதை நெல்லை, விதைத்து உள்ளார்கள். இந்த ஆண்டு ஜூன் 12 க்கும் முன்னாடி, மே 24லேயே, தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், குறுவை சாகுபடிக்கான விதை நெல் விற்பனைக்கு வந்துள்ளன.
தற்போது விவசாயிகள், சாகுபடிக்கான நாற்றங்கள் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். நன்னிலம் தாலுகாவில், ஒரு சில ஆறுகளில்,மராமத்து பணிகள் நடைபெற்று வருவ தால், தண்ணீர் வருவதற்கு, சற்று காலதாமதம் ஆனாலும், ஆற்று நீர் உறுதி என்கின்ற எண்ணத்தில், விவசாய பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார்கள்.
பருத்தி விவசாயம் கைவிட்ட நிலையில், முன்கூட்டியே ஆற்றில் நீர் வருவதால், குறுவை சாகுபடி விவசாயம், நல்ல மகசூலையும், பருத்தியில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய இயலும் எனக் கருதுகின்றனர். தற்போது விவசாயிகள் விவசாய கூலி தொழிலாளர்கள், குறுவை சாகுபடி விவசாயப் பணியில், முனைப்பு காட்டுகிறார்கள்.