உள்ளூர் செய்திகள்
அறநிலையத்துறை அதிகாரிகள்.

பழனி அருகே கோவில்களுக்கு சொந்தமான 54 ஏக்கர் நிலங்கள் மீட்பு

Published On 2022-06-02 06:03 GMT   |   Update On 2022-06-02 06:03 GMT
திண்டுக்கல் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் பழனி தாலுகா கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்டனர்
பழனி:

பழனி தாலுகா அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான மேல்கரைபட்டி கிராமத்தில் உள்ள 14.94 ஏக்கர் நிலம், ஒட்டன்சத்திரம் தாலுகா பொருளூர் கிராமம் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 15.69 ஏக்கர் நிலம், கொத்தையம் கிராமம் ஆழ்வார்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 23.67ஏக்கர் நிலம் என மொத்தம் 54.32 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாமாகவே முன்வந்து நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும், இந்து சமயஅறநிலையத்துறை விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம் எனவும் எழுத்துபூர்வமாக உறுதிமொழி கொடுத்தனர்.

அதன்பேரில் திண்டுக்கல் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் தக்கார் ராமநாதன், தனிவட்டாட்சியர் விஜயலட்சுமி, சீனிவாசபெருமாள் கோவில் செயல்அலுவலர் அண்ணாத்துரை மற்றும் அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் 54.32 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.
Tags:    

Similar News