உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே பெரிய பகண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(72) விவசாயி. இவர் பெரிய பகண்டை கிராமத்தில் இருந்து பகண்டை கூட்டுரோடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ரங்கநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரங்கநாதனின் மகன் ரஜினி கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.