உள்ளூர் செய்திகள்
சோளிங்கரில் சுற்றித் திரியும் நாய்கள் கடித்து சிறுவன் காயமடைந்த காட்சி.

சோளிங்கரில் நாய்கள் கடித்ததில் சிறுவன் காயம்

Published On 2022-06-01 10:25 GMT   |   Update On 2022-06-01 10:25 GMT
சோளிங்கரில் நாய்கள் கடித்ததில் சிறுவன் காயமடைந்தார்.
சோளிங்கர்:

சோளிங்கர் அடுத்த அர்ஜுனா ரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர். இவரது மகன் நிதிஷ்வர்மன் (வயது 8). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். நிதிஷ் வர்மன் இன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். 

அப்போது தெருவில் சுற்றி திரிந்து கொண்டிருந்த 4 நாய்கள் திடீரென சிறுவனை துரத்தி துரத்தி கை, கால், இடுப்பு போன்ற பகுதிகளில் கடித்து குதறியது. இதில் சிறுவன் காயம் அடைந்தான். 

நிதிஷ் வர்மன் கத்தி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து நாய்களை விரட்டி அடித்து சிறுவனை மீட்டு சோளிங்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து ஏற்கனவே இப்பகுதியில் நாய்கள் நிறைய இருப்பதாகவும் ரோட்டில் நடந்து செல்பவர்களை பயமுறுத்துவதாகவும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

ஆனால் நகராட்சி நிர்வாகம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது சிறுவனை நாய் கடித்ததால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். 

சோளிங்கரில் ஒவ்வொரு தெருகளிலும் சுமார் 15-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிவதால் அவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகம் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News