உள்ளூர் செய்திகள்
ஆப்பக்கூடல் அருகே 9 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூங்கொடியை கைது செய்தனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகே 9 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூங்கொடியை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் -கவுந்தப்பாடி சாலையில் உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சோதனை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த பூங்கோடி (35) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் இருந்து 9 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூங்கொடியை கைது செய்தனர்.