உள்ளூர் செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட டீலர்கள்
நெல்லையில் பெட்ரோலிய டீலர்கள் சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை ஊருடையார்புரத்தில் 2 பெட்ரோலிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் அனுப்பப்பட்டு வருகிறது.
தினமும் இங்கிருந்து 200 லாரிகளில் 20 லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசல்கள் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் தங்களது கமிஷன் தொகை கடந்த 2017-ம் ஆண்டுக்கு பின்னர் உயர்த்தப்படவில்லை என கூறி இன்று கொள்முதல் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு பெட்ரோலிய டீலர் அசோசி யேசன் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் நம்பிசாமி, மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், இளங்கோ, உத்தண்ட ராமன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
தினமும் நெல்லையில் இருந்து 5 மாவட்டங்களுக்கு 20 லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2017-க்கு பிறகு இரு மடங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் டீலர்களுக்கான கமிஷன் தொகை உயர்த்தப்ப–டாமல் அப்படியே உள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு 2.25 பைசாவும், டீசலுக்கு 1.85 பைசாவும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சேவை வரியை 3 மடங்கு உயர்த்தி உள்ளது. ஆனால் எங்களுக்கு கமிஷன் தொகை உயர்த்தப்பட வில்லை.
எனவே டீலருக்கான கமிஷன் தொகையை உடனே உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொள்முதல் நிறுத்த போராட்டம் காரணமாக நெல்லை ஸ்ரீபுரத்தில் 200 லாரிகள் சாலையில் இன்று வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது.