உள்ளூர் செய்திகள்
யாகத்தில் கவர்னர் தமிழிசை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

திட்டங்களை விரைவுபடுத்த பாஸ்ட் புதுவை திட்டம்- கவர்னர் தமிழிசை தகவல்

Published On 2022-05-31 14:38 IST   |   Update On 2022-05-31 14:38:00 IST
திட்டங்களை விரைவுபடுத்த பாஸ்ட் புதுவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

உலக அமைதி மற்றும் நன்மைக்காக புதுவை திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் நடந்த யாகத்தில் கவர்னர்  தமிழிசை பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் எண்ணம் போல் ஆன்மீகம் தழைத்து ஓங்க வேண்டும் என்பதற்கு தகுந்தாற் போல் புதுவை கொரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. தடுப்பூசியால் நாம் கொரோனாவை வென்றுள்ளோம்.

மாநில  வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து திட்டங்களையும் விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பெஸ்ட் புதுவையாக மாற்றுவோம் என்று தெரிவித்திருந்தார்.

அதற்கான  வேலைகளில் அரசு ஈடுபட்டு உள்ளது. அரசு அனுப்பும் கோப்புகளை விரைவாக கையெழுத்திட்டு அனுப்புவதற்கும், திட்டங்களை  விரைவாக நிறைவேற்றுவதற்கும் பாஸ்ட் புதுவை என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிலர் குற்றம் சாட்டுவது போல் இல்லாமல்  புதுவை அமைதியாக உள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பேட்டியின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக் குமார் ஆகியோர் உடனிருந்தனர்
Tags:    

Similar News