உள்ளூர் செய்திகள்
முட்டைகள் உடைந்து சேதமடைந்துள்ளதை படத்தில் காணலாம்

முட்டை ஏற்றி வந்த மினி லாரி சாலை ஓரம் கவிழ்ந்தது- 45 ஆயிரம் முட்டைகள் சேதம்

Published On 2022-05-30 11:07 GMT   |   Update On 2022-05-30 11:07 GMT
கள்ளக்குறிச்சி அருகே வடதொரசலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது லேசான சாரல் மழை பெய்தபடி இருந்தது. அப்போது மினிலாரி அந்த பகுதியில் உள்ள வேகத்தடையில் ஏறியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
கள்ளக்குறிச்சி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் அன்சர் பாஷா (வயது 24).  லாரி டிரைவர். இவர் நேற்று மாலை நாமக்கல்லில் இருந்து மினி லாரியில் சுமார் 45 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆற்காடு நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கள்ளக்குறிச்சி அருகே வடதொரசலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது லேசான சாரல் மழை பெய்தபடி இருந்தது. அப்போது மினிலாரி அந்த பகுதியில் உள்ள வேகத்தடையில் ஏறியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அந்த மினி லாரி தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து. இந்த விபத்தில் மினிலாரியில் இருந்த 45 ஆயிரம் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான மக்கள் மினிலாரியை நோக்கி வந்தனர்.  தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு திரண்டுவந்த மக்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். இதனைத் தொடர்ந்து மக்கள் அங்கிருந்து சென்றனர். பின்னர் மினிலாரியை பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தினர்.

இந்த விபத்தில் டிரைவர் அன்சர் பாஷா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Tags:    

Similar News