உள்ளூர் செய்திகள்
சிதம்பரம் அருகே வீட்டை விட்டு சென்ற தாய்-மகள் மாயம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டை விட்டு சென்ற தாய் மற்றும் மகள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே பள்ளிப்படை முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 27-ந்தேதி வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.
வீட்டில் இருந்த மனைவி ஜெயஸ்ரீ (வயது 23) மற்றும் 3 வயது மகள் லக்ஷனா ஆகியோரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த ராஜா தனது மகள், மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் 2 பேரும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராஜா சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாய்- மகள் என்ன ஆனார்கள், எங்கு சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.