உள்ளூர் செய்திகள்
ராமேசுவரம்-தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறையினர் சுங்கச்சாவடி அமைத்து வாகனங்களுக்கு வசூல் செய்

ராமேசுவரம்-தனுஷ்கோடி செல்லும் வாகனங்களுக்கு 3 இடங்களில் கட்டண வசூல்

Published On 2022-05-30 06:43 GMT   |   Update On 2022-05-30 06:43 GMT
ராமேசுவரம்-தனுஷ்கோடி செல்லும் வாகனங்களுக்கு 3 இடங்களில் கட்டண வசூலிப்பதால் பக்தர்கள்-சுற்றுலா பயணிகள் வேதனை அடைகின்றனர்.
ராமேசுவரம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு தினசரி வாகனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாபயணிகளும் வருகை தருகின்றனர். இவர்கள் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு  தனுஷ்கோடி  செல்கின்றனர். 

 தனுஷ்கோடிக்கு வாகனத்தில் செல்லும் போது அப்பகுதியில் புது ரோடு அருகே ஜடாயு தீர்த்தம் பகுதியில் வனத்துறையினர் சுங்கச் சாவடி அமைத்து 1 வாகனத்திற்கு ரூ. 20  வசூல் செய்கின்றனர். இதனால் வாகன ஓட்டுனர்கள்  அதிர்ச்சி அடைகின்றனர்.ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நுழைவு பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனத்திற்கு ரூ.150 முதல் ரூ.200 வரை கட்டணம் செலுத்தி வருகிறோம். அதன் பின்னர் தனுஷ்கோடி பகுதிக்கு செல்லவும் 2-வது சுங்கச்சாவடியில் ரூ.20 கட்டணம் செலுத்தி செல்வது  மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது என்று கூறுகின்றனர்.

ராமேசுவரத்திற்கு வரும் வாகனங்களுக்கு  நுழைவு வாயிலிலேயே நகராட்சி நிர்வாகம் சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூல் செய்து வருகிறது.இதற்கு தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.  பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த சுங்கச்சாவடியில்  பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில் தனுஷ்கோடி செல்லும் போது அங்கேயும் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறையினர் ஒரு சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூல் செய்து  வருகின்றனர். 

இதனால் சுற்றுலாபயணிகள் மற்றும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

 எனவே  கலெக்டர் இது தொடர்பாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News