உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

காரில் கடத்திக்கொண்டு செல்லப்பட்ட 1,566 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்- 4 பேர் கைது

Published On 2022-05-29 10:26 GMT   |   Update On 2022-05-29 10:26 GMT
மதுபாட்டில்களை வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி பகுதியில் வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது. அதன் பேரில் திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜய் கான்டிபன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

திருச்சுழியில் கருப்பசாமி (வயது 55) என்பவர் போலி மதுபாட்டில்கள் மறைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததன் பேரில் அவரை பிடித்து, ராஜபாளையம் மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த வீரன் மூலமாக திருமலை புரத்தைச் சேர்ந்த மூவேந்தன் (33), என்பவர் விற்பனைக்காக 1,566 மதுபாட்டில்கள் வாங்கப்பட்டு காரில் எம்.ரெட்டியபட்டி பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து சாத்தான்குளம் வீரன், திருச்சுழியைச் சேர்ந்த கருப்பசாமி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முனியசாமி (31), மதுரையை சேர்ந்த சந்தானம் (32), மூவேந்தன் ஆகிய 5 பேர் மீது எம். ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருப்பசாமி, மூவேந்தன், முனியசாமி, சந்தானம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய வீரனை தேடி வருகின்றனர்.

மதுபாட்டில்கள் விற்பனை செய்ய பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மதுபாட்டில்களை வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சுழி பகுதியில் போலி மதுபாட்டில்கள் உலா வருவதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News