உள்ளூர் செய்திகள்
விளையாட்டு விழாவில் டி.எஸ்.பி. சுபாஷ் சந்திரபோஸ் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கிய காட்சி.

அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு விழா

Published On 2022-05-29 13:58 IST   |   Update On 2022-05-29 13:58:00 IST
அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
குமாரபாளையம்: 

குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு  விழா முதல்வர் ஜான்  பீட்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது.  விளையாட்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குனர் ரவி வாசித்தார். 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா, குமாரபாளையம் எஸ்.ஐ. நந்தகுமார் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.  

ஆடவர் மற்றும் மகளிருக்கான  சதுரங்கம், கேரம்  போன்ற உள்ளரங்க போட்டிகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வலைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், கபாடி, தடகளம்  உள்ளிட்ட பல போட்டிகளும்  நடைபெற்றன. 

சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாவட்ட டி.எஸ்.பி. சுபாஷ் சந்திரபோஸ் பங்கேற்று, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
Tags:    

Similar News