உள்ளூர் செய்திகள்
டி.எஸ்.பி. சபரி நாதனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

Published On 2022-05-29 13:04 IST   |   Update On 2022-05-29 13:04:00 IST
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தில் மகளிர் குழுக்களை சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
ராஜபாளையம்

உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள் போன்றவைகள் நடைபெற்று வருகின்றன.  

இவற்றை தடுக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற சேவை நிறுவன அமைப்பு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பயிற்சி மற்றும் கையெழுத்து இயக்கம் தனியார் திருமண மண்டபத்தில்   நடைபெற்றது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமை தாங்கினார். வேர்ல்டு விஷன் இந்தியா திட்ட அலுவலர் பால சுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குழு, குழந்தைகள் நலக்குழு, சைல்ட் விஷன் போன்ற அமைப்பை சேர்ந்தவர்களும், காவல்துறையை சேர்ந்த ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். 

முடிவில் இதற்கான கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பிரதானமாக வைக்கப்பட்டிருந்த பலகையில் அனைவரும் கையெழுத்திட்டனர். மகளிர் குழுக்களை சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News