உள்ளூர் செய்திகள்
ஏ.டி.எம். மையம் அருகில் இருந்த குப்பை தொட்டியில் இருந்து தீ பற்றி எரிவதை காணலாம்.

தீ பிடித்து எரிந்த குப்பைத் தொட்டி

Published On 2022-05-29 13:00 IST   |   Update On 2022-05-29 13:00:00 IST
திடீரென தீ பிடித்து எரிந்த குப்பைத் தொட்டி அருகில் இருந்த ஏ.டி.எம். மையம் தப்பியது.
பாலையம்பட்டி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுவிடுகின்றனர். 

குப்பைகள் எரிந்து அதிலிருந்து கிளம்பும் புகையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் புதிய பஸ் நிலைய நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த குப்பைத் தொட்டி அருகே ஏ.டி.எம். மையம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அங்கிருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி குப்பைத்தொட்டியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுபோன்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் குப்பைத் தொட்டிக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News