உள்ளூர் செய்திகள்
சுரண்டை அரசு கல்லூரியில் விளையாட்டு மைதானம் திறப்பு
சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் புதிதாக விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டு உள்ளது.
சுரண்டை:
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் 400 மீட்டர் தடகளம், கால்பந்து, கோகோ, சிறப்பு கைப்பந்து பயிற்சி, கிரிக்கெட் வலைப்பயிற்சி ஆகிய மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மைதானத்தின் திறப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பீர்கான் தலைமை தாங்கினார். விளையாட்டுத் துறை இயக்குனர் மோகன கண்ணன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை யாற்றினார்.
இதில் துறை த்தலைவர்கள் ஜெயா, பரமார்த்த லிங்கம், மனோ ரஞ்சிதம், பிரேம் சந்தர், சக்தி, ராபின்சன், செல்வ கணபதி, சுந்தர், மதியழகன், தேசிய மாணவர் படை விஜய லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.