உள்ளூர் செய்திகள்
ஆதார் சேவை முகாமை ஊராட்சி மன்ற தலைவர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

அரியப்பபுரத்தில் சிறப்பு ஆதார் சேவை முகாம்

Published On 2022-05-28 14:51 IST   |   Update On 2022-05-28 14:51:00 IST
கீழப்பாவூர் ஒன்றியம் அரியப்பபுரத்தில் ஆதார் சேவை முகாம் நடைபெற்றது.
வீ.கே.புதூர்:

கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியப்பபுரம் ஊராட்சி மன்றம் மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து நடத்திய சிறப்பு ஆதார் சேவை முகாம்  அரியப்பபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. 

முகாமை அரியப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.  கைரேகைகள் மற்றும் கருவிழி பதிவுகளை புதுப்பிப்பதற்கும், ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், செல் நம்பர், இ-மெயில் திருத்தம் உள்ளிட்டவையும் கைரேகை மற்றும் புகைப்படத்துடன் கருவிழி பதிவு செய்தல் போன்ற சேவைகளும் மேற்கொள்ளப்பட்டன. 

2 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் 253 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் முகாமில் வார்டு உறுப்பினர்களான சக்திகுமார், செல்லம்மாள், அப்துல் காசிம்,எலிசபெத்,ரமேஷ், தனலட்சுமி, முருகன், சிவா, போஸ்ட்மேன்  குலசேகரன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News