உள்ளூர் செய்திகள்
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர்களாகிய நாங்கள் வீடுகள் கட்டி வசித்து வருகிேறாம்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதி அருந்ததியர் சமுதாய மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் ஜமாபந்தியில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
பல்லடம் வட்டம் சாமளாபுரம் கிராமம் பள்ளபாளையம் ராசவாய்க்கால் மேடு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர்களாகிய நாங்கள் வீடுகள் கட்டி வசித்து வருகிேறாம். எங்களுக்கு அந்த இடத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.மேலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய எங்களுக்கு அரசு இலவசமாக வீடு கட்டி தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.