உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்

பல்லடம் அருகே அருள்புரத்தில் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-27 16:33 IST   |   Update On 2022-05-27 16:33:00 IST
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது தலைமை வகித்தார்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் ஒன்றிய  பா.ஜ.க.அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்தகோரியும், சிறு, குறு, தொழில்களை பாதுகாக்க தவறியதை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது தலைமை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பரமசிவம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்மூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News