உள்ளூர் செய்திகள்
ஆரணி ஆற்றில் பிடிபடும் பெரிய வகை மீன்கள்

ஆரணி ஆற்றில் பிடிபடும் பெரிய வகை மீன்கள்- கிலோ ரூ.300 வரை விற்பனை

Published On 2022-05-27 07:17 GMT   |   Update On 2022-05-27 07:17 GMT
பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு, சிறு பழவேற்காடு, பெரும்பேடுபேட்டை உள்ளிட்ட ஆரணி ஆற்று பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
பொன்னேரி:

தமிழகத்தில் தற்போது மீன்படி தடைகாலம் அமலில் உள்ளது. இதனால் பெரிய வகை கடல் மீன்கள் விற்பனைக்கு வருவது குறைந்து உள்ளது. மேலும் மீன் விலையும் 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

இதனால் தற்போது அசைவ பிரியர்கள் பெரியவகை ஆற்று மீன்களை வாங்குவது அதிகரித்து உள்ளது. கடல் மீன்களை விட விலை குறைவு என்பதாலும், சுவையும் இருப்பதாலும் தற்போது ஆற்றுமீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு, சிறு பழவேற்காடு, பெரும்பேடுபேட்டை உள்ளிட்ட ஆரணி ஆற்று பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களது வலையில் 10 கிலோ வரை மீன்கள் சிக்குகிறது. இதனை போட்டி போட்டு மீன்பிரியர்கள் வாங்கி செல்கிறார்கள்.

கடந்த பருவமழையின்போது பெய்த கனமழையில் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது ஆரணி ஆற்றில் தேங்கிய உள்ள வெள்ள நீரில் மீன்கள் அதிகம் காணப்படுகிறது. இதில் பில்லு கெண்டை, லோகு கட்லா, ஜிலேபி, நன்னீர் இறால் பெரிய அளவில் அதிகமாக காணப்படுகின்றன. இதன் விலை கிலோ ரூ.200 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மீன் 5 கிலோ முதல் 10 கிலோ வரை காணப்படுகின்றன.

மேலும் கடந்த 5 நாட்களாக பழவேற்காடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன் பிரியர்கள் ஆற்று மீன்களை வாங்கிச்செல்வது மேலும் அதிகரித்து உள்ளது.

Tags:    

Similar News