உள்ளூர் செய்திகள்
ஆண்டிபட்டியில் நடந்த வருவாய்தீர்வாயத்தில் மூதாட்டி ஒருவரிடம் கோரிக்கை மனுவை பெற்று கலெக்டர் முரளிதரன் குறைகளை

ஆண்டிபட்டி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயமுகாம்

Published On 2022-05-27 06:04 GMT   |   Update On 2022-05-27 06:04 GMT
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயமுகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது
தேனி:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட கலெக்டர் முரளீதரன் 7 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டாக்களையும், நலிந்தோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கணவரை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம் பெறுவதற்கான ஆணை என மொத்தம் 12 பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், தேனி, உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய 5 வட்டாட்சியர் அலுவலகங்களில் 26ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி வரை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுகிறது.

இந்த நிகழ்வின்போது பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் சம்பந்தம் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

ஆண்டிபட்டி வட்டத்தில் 265 மனுக்களும், போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 163 மனுக்களும், தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் 210 மனுக்களும்,   உத்தமபாளையத்தில் 101 மனுக்களும்,  மற்றும் பெரியகுளத்தில் 96 மனுக்களும் என மொத்தம் 835 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்படும் மனுக்கள் மீதும் தனி கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு பயன்கள் உடன் வழங்கிட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலக மேலாளர் (பொது) ஜஸ்டின் சாந்தப்பா, ஆண்டிபட்டி வட்டாட்சியர் திருமுருகன், தனி வட்டாட்சியா; (சமூக பாதுகாப்பு திட்டம்) வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News