உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தருமபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-26 10:35 GMT   |   Update On 2022-05-26 10:35 GMT
தருமபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தருமபுரி,

அரசு அலுவலர்களின் உரிமை மற்றும் வாழ்வாதார கோரிக்கையான ஓய்வூதியத்தை மீட்டெடுக்க தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை த்தலைவர்கள் அசோக்குமார், மகேந்திரன், தீர்த்தகிரி, பாலமுருகன், கோவர்தன், ஜெய காஞ்சனா, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவசண்முகவடிவேலு வரவேற்புரை ஆற்றினார். சங்கர், மாதையன், ஆகியோர் சிறப்புரையாற்றினார்.மாணிக்கம், குணசேகரன், மணி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமுல் படுத்துவது,

ஈட்டிய விடிப்பினை ஒப்படைப்பு பணப்பலன் பெரும் திட்டத்தினை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்து அறிவிப்பை ரத்து செய்து உடனடியாக வழங்கிட வேண்டும்.
மத்திய அரசு 1.1 .2002 முதல் அறிவித்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை நாளது தேதிவரை அறிவிக்காமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன் கூட்ட முடிவில் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News