உள்ளூர் செய்திகள்
காட்டு யானை அட்டகாசம்

ஆனைமலை அருகே மாந்தோப்புக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

Published On 2022-05-26 09:53 GMT   |   Update On 2022-05-26 09:53 GMT
50-க்கும் மேற்பட்ட மாமரங்கள் சேதப்படுத்தியது.
ஆனைமலை:

பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு ஆனைமலை புலிகள் காப்பக மலை அடிவாரத்தில் உள்ள நரிமுடக்கு எனும் இடத்தில் 5 ஏக்கரில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மாமரங்கள் நடவு செய்து விவசாயம் செய்து வருகிறார். 

தற்போது மாம்ழப சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தோட்டத்தில் உள்ள மரங்களில் மாம்பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இதனை பறித்து விற்பனை செய்ய அவர் திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்தது. தோட்டத்திற்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்த காட்டு யானை அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட மாமரங்களை முறித்து சேதப்படுத்தியது.

மேலும் மாமரங்களில் கனிந்த நிலையில் இருந்த பழங்களையும் பறித்து ருசித்து சாப்பிட்டது. அதிகாலை வரை தோட்டத்தில் சுற்றிய காட்டு யானை அதன்பின்னர் வனத்திற்குள் சென்றது. இன்று காலை விவசாயி சக்திவேல் தோட்டத்திற்கு வந்தார். அப்போது மாமரங்கள் முறிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, சேதமடைந்த மரங்களை ஆய்வு செய்தனர். மேலும் தோட்டத்துக்குள் காட்டு யானை வராமல் தடுக்க மலையடிவாரத்தில் அகழிகளை வெட்டி விவசாய நிலங்களை காக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News