உள்ளூர் செய்திகள்
இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டி பரிசு வழங்கிய காட்சி.

நெல்லை மாவட்டத்தில் புகையிலை விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது -இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி. பாராட்டு

Published On 2022-05-26 09:03 GMT   |   Update On 2022-05-26 09:09 GMT
நெல்லை மாவட்டத்தில் புகையிலை விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்காக நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
நெல்லை:


நெல்லை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி மாவட்டத்தில் போலீசார்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் கங்கைகொண்டான் பகுதியில் 88 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கங்கை கொண்டான்  இன்ஸ்பெக்டர் பெருமாள் கைது செய்தார்.

மேலும் மாவட்டத்தில் முதல்முறையாக புகையிலை விற்பனை வழக்கில் அவரை குண்டர் சட்டத்தின்‌ கீழ் சிறையில் அடைத்தார். இந்த வழக்கில் சிறப்பாக இன்ஸ்பெக்டர் பெருமாளை எஸ்.பி. சரவணன்  நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.
Tags:    

Similar News