உள்ளூர் செய்திகள்
பாலியல் வன்கொடுமை விவகாரம்

ராமேஸ்வரத்தில் பாலியல் வன்கொடுமை: இறால் பண்ணைக்கு சீல் வைத்து வருவாய்த்துறை நடவடிக்கை

Published On 2022-05-25 10:40 GMT   |   Update On 2022-05-25 10:40 GMT
சந்திரா படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி சந்திரா (வயது 45). இவர் வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று காலையில் சந்திரா வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்றுள்ளார். அவர் தினமும் மாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பி விடுவார். ஆனால் நேற்று மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சம் அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் வடகாடு கடல் பகுதியில் தேடினர்.

அப்போது சந்திரா அங்கிருந்த முள்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரைநிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார்.

சந்திரா படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், சம்பவம் நடைபெற்ற இறால் பண்ணைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்.. நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை
Tags:    

Similar News