உள்ளூர் செய்திகள்
கோவிலில் டிஜிட்டல் வழி கட்டண சேவை

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் டிஜிட்டல் வழி கட்டண சேவை

Published On 2022-05-25 09:56 GMT   |   Update On 2022-05-25 09:56 GMT
பக்தர்கள், ஏ.டி.எம்., கார்டுகள், ‘கியூ ஆர் கோடு’ வாயிலாகவும், அர்ச்சனை கட்டணம் செலுத்தி ரசீது பெறலாம்.
ெபாள்ளாச்சி:

கோவில்களில் கட்டண ரசீது முறையில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவும், பக்தர்கள் வசதி கருதியும், கணினி வழி கட்டண சேவைகள் வழங்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை தொடங்கியது.

 அதன் ஒரு பகுதியாக, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அர்ச்சனைகளுக்கான கட்டண விபரங்கள் கணினி வாயிலாக பதிவு செய்யப்பட்டு, அச்சிடப்பட்ட ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பக்தர்களிடம் கட்டணம் பெற வங்கிகளுடன் இணைக்கப்பட்ட, இரண்டு ‘பி.ஓ.எஸ்.,’ (பாயின்ட் ஆப் சேல்) எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இதன் வாயிலாக பக்தர்கள், ஏ.டி.எம்., கார்டுகள், ‘கியூ ஆர் கோடு’ வாயிலாகவும், அர்ச்சனை கட்டணம் செலுத்தி ரசீது பெறலாம். இனி பணம் எடுக்காவிட்டாலும், கட்டணம் செலுத்துவதற்கு தேவையான அளவு சில்லரை இல்லாவிட்டாலும், கவலையின்றி பக்தர்கள், டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தி ரசீது பெறலாம். என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
  

Tags:    

Similar News