உள்ளூர் செய்திகள்
வரத பிடாரி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டது.

வரத பிடாரி அம்மன் கோவில் வைகாசி திருவிழா

Published On 2022-05-25 09:08 GMT   |   Update On 2022-05-25 09:08 GMT
வரத பிடாரி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் பழமையான வரத பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த கோவில் மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவில் ஆகும். 

இந்த கோவிலில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் கொடி ஏற்றப்படும் போது மழை பெய்வது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் மழை பெய்தது. 

மழையில் நனைந்தபடி தீபாராதனை மற்றும் அபிஷேகங்களுடன் கொடியேற்றப்பட்டது.இன்றில் இருந்து 10 நாட்கள் நடைபெறும் வைகாசி திருவிழாவானது இந்தப் பகுதி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

விழாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து.கண்ணன், துணை ஆணையர் அருணாசலம் ஆகியோரது வழிகாட்டுதலின்படி  கோவில் பேஸ்கார் ஜாஜி, பணியாளர் சீனிவாசன், மற்றும் பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News