உள்ளூர் செய்திகள்
மாரியம்மன்

கீரைக்கார மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா

Published On 2022-05-24 12:00 GMT   |   Update On 2022-05-24 12:00 GMT
மதுரை கீரைக்கார மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா நடக்கிறது.
மதுரை

மதுரை நன்மை தருவார் கோவில் தெருவில் உள்ள கீரைக்கார மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 

விழாவில் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு வைகை ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு ஆற்றில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

28-ந் தேதி 11 மணிக்கு அன்னதானம், அன்று மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறும். இரவு 8 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், 9 மணிக்கு அம்மன் பூப்பல்லக்கில் முளைப்பாரி யுடன் 4 மாசி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

29-ந் தேதி மதியம் 2 மணிக்கு விளையாட்டுப்போட்டிகள், இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 30-ந்தேதி அம்மன் பூஞ்சோலைக்கு அனுப்பும் வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News