உள்ளூர் செய்திகள்
.

கோரிக்கைகளை நிறைவேற்றாததால் கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமா- ஏற்றுக்கொள்ள கலெக்டரிடம் மனு அளித்தனர்

Published On 2022-05-24 16:03 IST   |   Update On 2022-05-24 16:03:00 IST
கோரிக்கைகளை நிறைவேற்றாததால் கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருளர்கள் மலைவாழ்மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் அரசின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்து வது தொடர்பாக இங்குள்ள வார்டு உறுப்பினர்களின் கருத்துகளை கேட்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பஞ்சாயத்தை சேர்ந்த கவுன்சிலர்கள் தருமபுரி மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்று கொடுத்துள்ளனர்.

 அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:-
நாங்கள் பதவி ஏற்றது முதல் இதுவரை பஞ்சாயத்தின் நிதிநிலை குறித்து எந்தவிதமான தகவலும் தெரிவிப்பதில்லை. இப்பகுதி மக்களுக்கு குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட எந்தவிதமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுவதில்லை.

இந்த பஞ்சாயத்து ஜனநாயக முறையில் நடைபெறுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி முறைப்படுத்தவேண்டும். இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில்  அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளோம்.

எங்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
ஒட்டுமொத்தமாக ஊராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய எடுத்துள்ள முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News