உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்

Published On 2022-05-24 15:55 IST   |   Update On 2022-05-24 15:55:00 IST
வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
நீடாமங்கலம்:

வலங்கைமான் வட்டாரத்தில் மேலவிடையல், மாணிக்கமங்கலம், அரவூர், ஏரிவேளூர்,மணலுர், மாளிகைதிடல், 83.ரெகுநாதபுரம், ஆகிய கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் நடப்பாண்டிற்கான மானியத்தில் விவசாய பொருட்கள் வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் விவசாயி ஒருவருக்கு  3 தென்னங்கன்று ரூ.  150 மானியத்தில் வழங்கப்பட்டது.

மேலும் வரப்பு உளுந்து 15ஹெக்டேருக்கு ஏக்கருக்கு ரூ.375மானியம்,கை தெளிப்பான் ரூ. 750 மானியத்தில் 5 நபர்களுக்கும், விசை தெளிப்பான் 5 நபர்களுக்கு ரூ.1500 மானியத்திலும், ஜீங் சல்பேட் 1 ஏக்கருக்கு 10 கிலோ வீதம் ரூ.300 மானியம், ஜுப்சம் 1 ஏக்கருக்கு 200 கிலோ வீதம் ரூ.300 மானியத்தில் வழ்ங்கப்பட்டது.

மேலும் தோட்டகலை துறை சார்பில் 128 நபர்களுக்கு ரூ.45 மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியை வேளாண் துறை உதவி இயக்குநர் ஜெயசீலன் ஏற்பாடு செய்தார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வேளாண் துறை,  பொறியியல் துறை, மகளிர் திட்டம், கால்நடை துறை, ஒன்றிய கவுன்சிலர் அன்பரசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்,பயனாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News