உள்ளூர் செய்திகள்
விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

பெரிய ஏரிக்கோடி புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா

Published On 2022-05-24 10:02 GMT   |   Update On 2022-05-24 10:02 GMT
பெரிய ஏரிக்கோடி புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரிக்கோடியில் உள்ள புனித சூசையப்பர் ஆலய தேர் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.நாள்தோறும் அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட பூஜைகள் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு புனித சூசையப்பர் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக, கோவை நல்லாயன் குருத்துவக்கல்லூரி பேராசிரியர் அருள் தந்தை அந்தோணி மதலைமுத்து தலைமையில், ஆடம்பர கூட்டுத் திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித சூசையப்பரின் தேர்பவனி நடைபெற்றது. தேர் பவனியை அருட்தந்தை ஜார்ஜ் புனித நீரைக்கொண்டு மந்தரித்து தொடங்கி வைத்தார். 

மாபெரும் வாணவேடிக்கையுடன் நடைப்பெற்ற இந்த தேர் பவனி பெரிய ஏரிக்கோடி கிராமப் பகுதி வழியாக சுற்றி வந்தது. தேர்த்திருவிழாவில், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு, தேரின் மீது உப்பு, மிளகு ஆகியவற்றினை தூவி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
Tags:    

Similar News