உள்ளூர் செய்திகள்
விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

கடத்தூர் கிளை நூலகத்தில் பொது நூலக தின விழா

Published On 2022-05-24 15:27 IST   |   Update On 2022-05-24 15:27:00 IST
கடத்தூர் கிளை நூலகத்தில் பொது நூலக தின விழா நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி, 

மத்திய அரசின் ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை, ராஜா ராம்மோகன் ராய் பிறந்த நாளை அரசு நூலகதினமாக அறிவித்துள்ளது. 
இதையடுத்து ராஜா ராம்மோகன் ராய் பிறந்த 250-ம் ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  

தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகத்தில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தரங்குக்கு நூலகர்  சண்முகம் தலைமை வகித்தார். பொது நூலகங்களின் சேவைகளை மேம்படுத்துவதில் நூலகர்களின் பங்கு என்ற தலைப்பில் நூலகர் சரவணன் கருத்துரை வழங்கினார்.

 தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் நூலகர்கள்    பத்மாவதி, தங்கம்மாள், சிவகாமி,  கலை ச்செல்வி, திருஞானம், ஜெயவேல்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நூலகர் ஜாகிர் உசேன் வரவேற்புரை வழங்கினார். முடிவில் நூலகர் சம்பத் நன்றி கூறினார்.
Tags:    

Similar News