உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கடலோர காவல் நிலைய ஊர்க்காவல் படைக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

Published On 2022-05-22 14:03 IST   |   Update On 2022-05-22 14:03:00 IST
கடலோர காவல் நிலைய ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 24-ந் தேதி நடை பெறுகிறது.
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தளவாயாக  கொண்டு செயல்படும் ஊர்காவல் படையில் புதிதாக ஜி.ஓ 196-ன்படி ஒப்பளிக்கப்பட்ட 30 பணியிடங்களுக்கு, கடலோர பாதுகாப்பு காவல் நிலையங்களில் இணைந்து 

பணிபுரிய மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் மற்றும் திருப்புனவாசல் பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு உள்ளம் படைத்த மீனவஇளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

கீழ்க்கண்ட தகுதியுடையவர்கள் கல்விச்சான்றி தழ்களின் அசல் மற்றும் நகலுடன் 24.05.2022-ம் தேதி காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகிவிண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.  

தகுதிகள் : பத்தாம் வகுப்பு வயது (20 முதல் 45 வரை), உடற்தகுதிகள் - ( காவல் துறையை போன்றது), குற்ற வழக்குகளிலோ, அரசியல் கட்சிகளிலோ, சாதி ரீதியிலான அமைப்புகளிலோ, அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளிலோ, 

இயங்கங்களிலோ சம்மந்தப்பட்டவர்களாக இருக்க கூடாது. மேற்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூரின்றி செயல்படலாம்.   பணிநாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும்.

Similar News