உள்ளூர் செய்திகள்
விழாவில் மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசு வழங்கல்

கல்லூரியில் மாணவர்கள் அமைப்பு தொடக்க விழா

Published On 2022-05-21 16:03 IST   |   Update On 2022-05-21 16:03:00 IST
திருக்குவளை கல்லூரியில் மாணவர்கள் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம்  திருக்குவளையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் உறுப்பு கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கில் “எல்லைகள் இல்லா பொறியாளர்கள் மாணவ ர்கள் அமைப்பு” தொடக்க விழா நடைப்பெற்றது. 

முன்னதாக குத்துவிளக்கு ஏற்றி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு கல்லூரி புல முதல்வர் இளங்கோவன் தலைமை வகித்தார். மின்னனியல் மற்றும் மின்னனு துறை தலைவர் முனைவர் சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சித்ரா செல்வி வரவேற்புறையாற்றினார்.‌

நிகழ்ச்சியில் “எல்லைகள் இல்லா பொறியாளர்கள்” தலைவர் முனைவர் பாரத் சந்திர மகாராஜா காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். 

சிறப்பு அழைப்பாளராக “ பெங்களூர் இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் விஞ்ஞானி முனைவர் வி.தில்லிபாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாணவர்கள் மிகச்சிறந்த கண்டுப்பிடிப்புகளை அறிவியல் தொழில் நுட்பத்தின் வாயிலாக கண்டறிந்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் பக்க பலமாக இருக்க வேண்டும்,

அறிவியல் கண்டுபிடி ப்புகளை காலத்திற்கேற்ப அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என செயல்முறை விளக்கங்களோடு பேசி னார். 

பின்னர் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து தான் எழுதிய மூன்று புத்தகங்களை கல்லூரி நூலகத்திற்கு பரிசாக வழங்கினார். முடிவில் உதவி பேராசிரியர் முனைவர் எம்.துரைராசன் நன்றி கூறினார்.

Similar News