உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பிளஸ்-2 மாணவர்கள் மோதலால் பரபரப்பு

Published On 2022-05-21 15:19 IST   |   Update On 2022-05-21 15:19:00 IST
முன்விரோதம் காரணமாக பிளஸ்-2 மாணவர்கள் மோதிக்கொண்டனர்.
புதுக்கோட்டை:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொழிப்பாட தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பாட வாரியாக தேர்வு நடைபெறுகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்திலும் 90-க்கும் மேற்பட்ட மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பிளஸ்2 வகுப்பில் இயற்பியல், பொருளாதாரம, கணினி தொழில் நுட்பம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. 

புதுக்கோட்டையில் ஒரு சில மையங்களில் பொதுத்தேர்வை எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் பலர் உற்சாகமடைந்து கொண்டாடினர். ஒருவர் மீது ஒருவர் மை தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இந்த நிலையில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதி பள்ளியில் தேர்வு முடிந்து பிளஸ்-2 மாணவர்கள் வெளியே வந்தனர். அப்போது மாணவர்கள் இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. 

ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக சிலரும் வந்து சண்டையிட்டனர். இதனால் பள்ளி முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்தது கணேஷ்நகரர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து விசாரித்தனர். சில மாணவர்களை விரட்டியடித்தனர். 

போலீசார் விசாரணையில் மாணவர்களிடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. தேர்வு நிறைவடைவதால் ஏற்கனவே உள்ள   பகையை தற்போது வெளிகாட்ட தொடங்கி உள்ளனர். இதனால் இதுபோன்ற மோதல் சம்பவம் ஏற்படுகிறது என போலீசார் தெரிவித்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.  

Similar News