உள்ளூர் செய்திகள்
கலையரங்கம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

கந்தர்வகோட்டையில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை

Published On 2022-05-21 15:06 IST   |   Update On 2022-05-21 15:06:00 IST
கந்தர்வகோட்டை அருகே கலையரங்கம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை அருகே கலையரங்கம்அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நெப்புகை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில்ரூ.7 லட்சம் மதிப்பில் சூல பிடாரி அம்மன் கோவில் திடலில் கலையரங்கம் அமைப்ப–தற்கான பூமி பூஜை நடைபெற்றது.

அதேபோல் காட்டு நாவல் ஊராட்சியில் பயணிகள் பேருந்து நிழற்குடை  ரூ. 7 லட்சம்மதிப்பில் அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.  

நிகழ்ச்சிகளில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் மழவராயர், கந்தர்வகோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், சுந்தம்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி பிரியா,  

நெப்புகை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம்,காட்டு நாவல் ஊராட்சி மன்றத்தலைவர் ஆரஞ்சுபாப்பா குணசேகரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News