உள்ளூர் செய்திகள்
file photo

அடுக்குமாடி குடியிருப்பில் தொடர் திருட்டு

Published On 2022-05-21 09:36 GMT   |   Update On 2022-05-21 09:36 GMT
அடுக்குமாடி குடியிருப்பில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த சகோதரர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை:


புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1920 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இதில் சில குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். சில குடியிருப்புகள் இன்னும் காலியாக உள்ளது. இப்படி காலியாக இருக்கும் வீடுகளில் உள்ள குடிநீர்குழாய்கள், மரப்பொருட்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை இரவு நேரங்களில் சில மர்ம நபர்கள் வந்து உடைத்து திருடி செல்வதாக, அப்பகுதியில் குடியிருப்போர் திருக்கோகர்ணம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும போலீசார் தொடர்ந்து அப்பகுதியை கண்காணித்து வந்தனர்.  இந்நிலையில் நேற்று இரவு பிளாக் எண் 31,32 மற்றும் 22-ல் உடைக்கும் சந்தம் கேட்டது.

இதனை அறிந்த போலீசார் அக்குடியிருப்பிற்கு விரைந்து சென்றனர். அப்போது 4 மர்ம நபர்கள் அங்குள்ள பொருட்களை உடைத்துக் கொண்டிருப்பதை பார்தபோலீசர் அவர்களை பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். மற்ற 3 நபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தினர்.


விசாரணையில் அவர்கள் நரிமேடு பகுதியை சேர்ந்த சகோதரர்களான பாண்டி, (வயது 29), மாரியப்பன் (20) மற்றும் அடப்பன்வயல் பகுதியை சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது. தப்பியோடிய திருக்கோர்ணம் பகுதியை சேர்ந்த குமாரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News