உள்ளூர் செய்திகள்
வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பந்தக்கால் நடும் விழா

Update: 2022-05-20 10:28 GMT
வேதபுரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா நடந்தது.
செய்யாறு :

செய்யாறு டவுன், திருவத்திபுரத்தில் அமைந்துள்ள ஆண் பனையை பெண்பனையாக மாற்றிய திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற பாலகுஜாம்பிகை உடனாய வேதபுரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வரும் 6.7.2022 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் மணி குருக்கள் மந்திரம் ஓதி ஓ.ஜோதி எம்.எல்.ஏ., திருவத்திபுரம் நகர மன்ற தலைவர் மோகனவேல், ஆணையாளர் ரகுராமன், தி.மு.க. நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விசுவநாதன், நகர செயலாளர் நகரமன்ற உறுப்பினர் கே.வெங்கடேசன், பாமகவை சேர்ந்த காத்தவராயன், சீனிவாசன், திமுக நகர மன்ற உறுப்பினர்கள் ஞானமணி சின்னதுரை, கார்த்திகேயன், கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபார்த்திபன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News